என் கர்ப்பத்துக்கு காரணம் நீதான்... முன்னாள் காதலனை மிரட்டிய இளம்பெண்: சினிமா பாணியில் நடந்த சுவையான சம்பவம்
நீதான் என் கர்ப்பத்துக்கு காரணம் என தன் முன்னாள் காதலரை மிரட்டிய இளம்பெண் ஒருவர், சினிமா பாணியில் செயற்கையாக பெரிய வயிறு ஒன்றை செய்து பொருத்தியிருந்தது தெரியவந்தது.
Kahaani என்ற ஹிந்தி திரைப்படத்தில், காணாமல் போன தன் கணவனைத் தேடி லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு பயணம் செய்வார் ஒரு கர்ப்பிணிப்பெண்.
கடைசியில் அவர் கர்ப்பிணியே அல்ல, செயற்கையாக கர்ப்பிணி வயிறு ஒன்றை (prosthetic baby bump) செய்து வயிற்றில் பொருத்திக்கொண்டு ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவரும்.
அதேபோல் ஒரு சம்பவம் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது. Jaclyn McGowan (36) என்ற இளம்பெண்ணுக்கும் Jamie Aitken என்பவருக்குமான குறுகிய கால காதல், 2019ஆம் ஆண்டு முறிந்துள்ளது.
ஆனால், தான் Aitkenஆல் கர்ப்பமுற்றுவிட்டதாக சொல்லி அவரை ஏமாற்றியதுடன், அவரது குடும்பத்தாரையும் ஏமாற்றியிருக்கிறார் Jaclyn.
மேலும், குழந்தைக்கான பொருட்கள் வாங்குவதற்காக Aitkenஇடம் பணமும் கேட்டுள்ளார் Jaclyn.
கர்ப்பம் போல் காட்டுவதற்காக செயற்கை வயிறுடன் Aitkenஇன் அலுவலகத்திற்கு செல்வது, அவரது தாயிடம் குழந்தைக்கு வைத்துள்ள பெயர் வைத்து பேசுவது, என Aitkenஐயும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளதுடன், தொடர்ந்து நேரிலும், தொலைபேசியிலும் 9 மாதங்களாக தொல்லை கொடுத்தும், அச்சுறுத்தியும் வந்துள்ளார் Jaclyn.
பின்னர், அவர் உண்மையில் கர்ப்பிணியே அல்ல என்ற உண்மை தெரியவர, வசமாக சிக்கினார் Jaclyn.
விசாரணையில், தான் ஏமாற்றியதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ள Jaclynக்கு அடுத்த மாதம் தண்டனை விவரம் தெரிவிக்கப்பட உள்ளது.