Whatsapp Channels -ல் பிரபலங்களுடன் பேசலாம்.. எப்படி இதனை பயன்படுத்துவது?
இந்தியா மற்றும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய அம்சம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ்அப். இந்த அப் மூலம் கோடிக்கணக்கான பயனர்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பயன்படுத்தும் செயலியாக இருக்கிறது.
அதுவும், தங்களுடைய பயனர்களுக்கு தொடர்ந்து அப்டேட்டை வழங்கிக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எதாவது ஒரு அப்டேட்டை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது.
அந்தவகையில் 'Channels' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ செய்திகளை இந்த Whatsapp Channels அம்சம் மூலம் தெரிந்து கொள்ளளலாம் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Whatsapp Channels
வாட்ஸ்அப்பில் அப்டேட்ஸ் எனும் ஒரு புதிய டேப் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான சாட்களில் இருந்து தனித்தனியாக அவர்கள் பின்பற்ற விரும்பும் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேனல் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்பலாம். பயனர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் மட்டுமே சேனல்களை பின்தொடர்வதற்கு ஒருவித கோப்பகத்தை (searchable directory ) வாட்ஸ்அப் வழங்குகிறது.
சாட், இமெயில் மற்றும் ஆன்லைன் பதிவுகளில் இருந்து கிடைக்கும் இணைய செய்திகளை கூட இதன் மூலம் அறியலாம்.
முக்கியமாக சேனல் நிர்வாகி மற்றும் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் புகைப்படம் ஃபாலோவர்களுக்கு காட்டப்படாது. மேலும், அட்மின் மற்றும் பயனாளிகளுக்கு தனிநபர் தொலைபேசி உள்ளிட்ட விவரங்கள் காட்டப்படாது.
அதுபோல நிர்வாகிகள் தங்களுடைய சேனலில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் மற்றும் பார்வர்டுகளை தவிர்ப்பதற்கு விருப்பத்தை பெறலாம்.
எப்படி பயன்படுத்துவது?
* Google Play Store அல்லது App Store -லிருந்து WhatsApp செயலியை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் (Update) செய்ய வேண்டும்
* வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்கிரீனின் அடிப்பகுதியில் உள்ள Updates என்ற டேப்-ஐ கிளிக் செய்தால் பின்தொடரக்கூடிய சேனல்களின் பட்டியலைக் காண முடியும்.
* சேனலைப் பின்தொடர்வதற்கு, அதன் பெயருக்கு அடுத்துள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
* அதனுடைய சுயவிவரத்தையும் புரொஃபைல் பிக்சரையும் பார்ப்பதற்கு சேனல் பெயரை கிளிக் செய்ய வேண்டும்.
* சேனல் அப்டேட்க்கு ரியாக்ஷன் செய்ய விரும்பினால் செய்தியை லாங் பிரஸ் செய்ய வேண்டும்.
new channel alert ? start channeling katrina kaif https://t.co/hyW6Urth1f pic.twitter.com/iT25kjunHC
— WhatsApp (@WhatsApp) September 14, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |