8 மணி நேரம்! ஒரே ஒரு பயணிக்காக நடுவானில் பறந்த விமானம்.. வைரல் வீடியோ
டிக்டாக் பிரபலம் ஒருவர் தனி ஆளாக விமானத்தில் பயணித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லண்டனில் இருந்து அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணித்த பிரபல டிக்டாக்கர் Kai Forsyth என்பவர் தனி ஆளாக விமானத்தில் பயணித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
லண்டலில் இருந்து Kai Forsyth விமானத்தில் ஏறியபோது அவர் மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார். அதுவும் எட்டு மணி நேரம் வேற எந்தப் பயணியும் இல்லாமல் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
விமானம் முழுவதும் காலியாக இருந்ததையடுத்து அவர் தனது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை உருவாக்கி டிக்டாக்கில் வெளியிட்டார். மேலும், நாங்கள் மணிக்கணக்கில் திரைப்படங்களைப் பார்த்தோம்.
கணக்கே இல்லாமல் உணவுகளை சாப்பிட்டோம். இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்று Kai Forsyth வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
மேலும் விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என்று கேபின் குழுவினர் தெரிவித்தனர் என்று வீடியோவின் கேப்ஷனில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.