மஜோர்காவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய ஜோடி: கார் மோதியதில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
மஜோர்காவில் பாதசாரிகளுக்கான நடைபாதை சாலையை கடக்க காத்துக் கொண்டு இருந்த பிரித்தானிய ஜோடி மீது வாகனம் மோதியதில் பிரித்தானிய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய இளம்பெண் மரணம்
மஜோர்காவிற்கு விடுமுறையை கொண்டாடுவதற்காக வந்த பிரித்தானிய ஜோடிகள் மீது உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணிக்கு வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 35 வயதுடைய பிரித்தானிய பெண்ணுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், அவரது கூட்டாளியான ஆண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரித்தானிய ஜோடி பால்மா கதீட்ரலுக்கு வெளியே உள்ள பாதசாரிகளுக்கான நடை பாதையை கடக்க காத்து கொண்டு இருந்த போது, கடற்பரப்பு இரட்டைப் பாதையில் நடுவில் உள்ள நடைபாதை கட்டுப்பாட்டை இழந்து ஏறிய வாகனம் அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் கைது
பால்மாவின் டவுன்-ஹால் பணிபுரியும் உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர், பாதிக்கப்பட்டவர்களின் தேசியங்களை உறுதிப்படுத்தும் நிலையில் அவர் இன்னும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 4x4 ஓப்பல் ஃபிரான்டெராவின் ஓட்டுநர் 35 வயதுடைய பெண் எனவும், அவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் உள்ளூர் அறிக்கைகளின்படி தெரியவந்துள்ளது.
ஆனால் ஓட்டுநரை காவலில் வைத்திருந்ததை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.