பணிக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே பணிநீக்கம்! வேதனையை பகிர்ந்த இளைஞர்
அமெரிக்காவில் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
99 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஊழியர்களுக்கு ஒன்லைன் கூட்டம் நடத்தியது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் 110 ஊழியர்களால் 11 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி 99 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
அத்துடன் கூட்டத்தில் பங்கேற்ற 11 பேர் மட்டுமே பணியில் தொடர்வார்கள் என்றும் அவர் மின்னஞ்சல் அனுப்பினார்.
இளம் ஊழியர்
இந்த நிலையில், இளைஞர் ஒருவர் Reddit தளத்தில் தானும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பகிர்ந்துள்ளார்.
ஆனால், குறித்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஒரு மணிநேரத்திலேயே தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு CEOவிடம் இருந்து ஒன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்த அழைப்பும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |