73 வயது பணக்கார முதியவரிடம் திருமண ஆசைக்காட்டி ஜாலியாக அவருடன் ஊர் சுற்றிய பெண்! பின்னர் அம்பலமான அவர் முகம்
இந்தியாவில் 73 வயது முதியவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 1 கோடிக்கு மேல் ஏமாற்றிய இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் ஜெரோன் டி சவுசா (73). அவருடைய தந்தை வாங்கி வைத்த நிலம் ஒன்றை கடந்த 2010 ஆண்டு விற்பனை செய்த ஜெரோன், நிதி நிறுவனம் ஒன்றில் 4 முதலீட்டு திட்டங்களில் அந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அந்த வங்கிக்கு சென்று வரும்போது அங்கு பணிபுரிந்த சாலினி சிங் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், ஒரு கட்டத்தில் ஜெரோனை திருமணம் செய்து கொள்வதாகவும், கடைசி காலத்தில் உடனிருந்து பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
ஷாலினி கூறியதில் நெகிழ்ந்துபோன ஜெரோனும் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, ஷாலினியும், ஜெரோனும் பார்க், ரெஸ்டாரண்ட் என இன்ப சுற்றுலா சென்று நாட்களை கழித்துள்ளனர்.
பின்னர், தொழில் ஒன்றை தொடங்குவதற்காக ஜெரோனிடம் பணம் கேட்ட ஷாலினி, அதில் வரும் லாபத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அவரின் பேச்சைக் கேட்ட ஜெரோன் தன்னிடம் இருந்த 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார்.
பணம் சென்ற நாளில் இருந்து திடீரென ஷாலினி ஜெரோனின் தொடர்பை முழுமையாக துண்டித்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த ஜெரோன் பொலிசில் புகார் அளித்தார்.
அதில் ஷாலினி தன்னை எப்படியெல்லாம் பேசி ஏமாற்றினார் என தெரிவித்துள்ள ஜெரோன் தற்போது அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.