திருமணத்தில் நடனமாடியபோது 23 வயது பெண் அதிர்ச்சி மரணம்
இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர், திருமண நிகழ்வில் நடனமாடியபோது மயங்கி விழுந்த இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கீத் நிகழ்வில் நடனம்
மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பரினீதா ஜெயின். இவர் விதிஷா மாவட்டத்தில் உறவினரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமான சங்கீத் நிகழ்வின்போது அவர் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார்.
மயங்கி விழுந்து மரணம்
மேலும், அவர் மேடையில் பாடலுக்கு நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் உடனே தூக்க சென்றுள்ளனர். அப்போது மூச்சுப்பேச்சு இன்றி கிடந்த பரினீதா உயிரிழந்தது தெரிய வந்தது.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |