57 வயது முதியவரை திருமணம் செய்யும் 23 வயது அழகிய இளம்பெண்.. காரணம் இது தான்!
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் 57வயது முதியவரை காதலித்து திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் Las Vegas நகரில் வசித்து வருபவர் Alyssa Renee(23). இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த Peter(57) என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் Alyssa Renee இவரை திருமணம் செய்து கொள்ள போவதாக டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக வெளியே சுற்றுவது, டேட்டிங் செய்வது என நாட்களை சந்தோஷமாக கழித்து வருகின்றனர். பீட்டர் தனது இளம் காதலி Alyssa Renee-விற்கு பல கோடி மதிப்புள்ள கிஃப்ட்களை வாங்கி பரிசளித்துள்ளாராம்.
அவருக்காக அதிக பணம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் Alyssa வேலைக்கு செல்ல தேவையில்லை என்றும் அவருடைய தேவைகளை பீட்டரே செய்து வருகிறாராம்.
இந்நிலையில் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக Alyssa Renee தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.