நீ வேற யாரையாவது திருமணம் செஞ்சிக்கோ! நடுரோட்டில் 23 வயதான இளம்பெண் கழுத்தறுத்து கொலை... காதலன் வெறிச்செயல்
இந்தியாவில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசித்து வந்தவர் அனிதா (23). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.
ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால், அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். வெங்கடேசை காதலிப்பது பற்றி தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா கூறியுள்ளார். ஆனால் அனிதாவை, வெங்கடேசுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்து விட்டனர். அத்துடன் அனிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தார்கள்.
இதுபற்றி வெங்கடேசிடம் பேசிய அனிதா பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், என்னை நீ மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என கூறினார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று காலையில் வீட்டில் இருந்து அனிதா வேலைக்கு புறப்பட்டு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அனிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வெங்கடேஷ் ஓடிவிட்டார்.
இதில், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்துள்ளனர். அனிதாவை கொலை செய்ய ரூ.80-க்கு புதிதாக கத்தி ஒன்றை வெங்கடேஷ் வாங்கியதும் அதனை பயன்படுத்தி தான் அனிதாவை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
கைதான வெங்கடேஷிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.