இளம்பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்.., பெங்களூருவை உலுக்கிய சம்பவம்
கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கொடூர சம்பவம்
இந்திய மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் ஹேமந்த், மகாலட்சுமி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
பின்னர் அவர், பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.
இவர், அங்குள்ள மாலில் வேலை செய்து வந்துள்ளார். அவரை தினமும் ஒரு நபர் அழைத்து சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 -ம் திகதி முதல் மகா லட்சுமியை காணவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போனை பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதனால் மகாலட்சுமியின் தாயார் மற்றும் அவரது சகோதரி அதிர்ச்சியடைந்து பெங்களூருவில் அவர் வசித்து வந்துள்ள வாடகை வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
பின்னர், அக்கம் பக்கத்து வீட்டில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் மகாலட்சுமி நீண்ட நாட்களாக காணவில்லை என்றும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர், மகாலட்சுமியின் சகோதரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், பொலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று மகாலட்சுமியை தேடியுள்ளனர்.
அப்போது, குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அவரது உடல் 30 பாகங்களாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சேகரித்தனர்.
இதில் முதற்கட்ட ஆய்வில், மகாலட்சுமி 10 நாட்களுக்கு முன்பாகவே இறந்தது தெரியவந்துள்ளது. மேலும், உடலின் பாகங்கள் சில அழுகிய நிலையிலும் இருந்துள்ளது.
இந்நிலையில், மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்றுவந்த இளைஞர் மாயமானதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |