பல மில்லியன் அமெரிக்க ஊதியத்தை உதறிவிட்டு.,ரூ.2000 கோடி விவசாய நிறுவனத்தை கட்டியெழுப்பிய இந்திய இளைஞர்
அமெரிக்காவில் மிகப்பெரிய ஊதியத்தில் பார்த்த வேலையை துறந்து விட்டு இந்தியாவின் சொந்த கிராமத்திற்கு திரும்பி பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை அர்ஜுன் அலுவாலியா என்ற இளைஞர் உருவாக்கியுள்ளார்.
உதவி பெண் மூலம் கிடைத்த ஐடியா
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள A&M பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் பட்டம் பெற்று, மிகப்பெரிய ஊதியத்தில் நியூயார்க் நகரில் உள்ள Abraaj குழு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அர்ஜுன் அலுவாலியா(Arjun Ahluwalia) என்ற 27 வயது இளைஞர் வேலையை துறந்து விட்டு இந்தியாவின் சொந்த ஊருக்கு திரும்பி 2000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.
தனது வீட்டு பெண் உதவியாளர் ஒருவர் தொலைபேசி வாங்குவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் கடன் வாங்கியதை பார்த்த இளைஞர் அர்ஜுன் அலுவாலியாவுக்கு தன்னுடைய தொழில் நிறுவனம் தொடர்பான சிந்தனை உதித்துள்ளது.
அர்ஜுன் அலுவாலியா தன்னுடைய அமெரிக்க நண்பருடன் இணைந்து இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாய முறைகளை கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆராய்ந்து தன்னுடைய தொழில் தொடர்பான திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
2000 கோடி நிறுவனம்
தன்னுடைய தொழில் திட்டத்தை தீர்மானித்த அர்ஜுன் அலுவாலியா, இந்திய விவசாயிகள் அதிகாரப்பூர்வமற்ற கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி கெடுவதை தவிர்க்கும் விதமாக சுகந்திரமான நிதியுதவி வழங்கும் நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டார்.
மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்தில் வெற்றிகரமாக 8 மாதங்கள் நடத்திய முன்னோடி திட்டத்திற்கு பிறகு கிராமப்புற ஃபின்டெக் நிறுவனத்தை அர்ஜுன் அலுவாலியா உருவாக்கினார்.
இந்த நிறுவனம் தற்போது வெற்றிகரமாக விவசாய நிதியுதவியில் பங்காற்றி வருவதுடன் 2000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Young indian businessman build Rs.2000cr farm industry, Rs.2000cr value rural fintech company founder Arjun Ahluwalia, jai kisan, money, young indian businessman success story