பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இளம் இந்திய தம்பதி: டெல்லியில் நடந்த அதிரடி கைது
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த தம்பதியினரை டெல்லி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தம்பதி
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியை சேர்ந்த இளம் தம்பதியான முகமது சாஹில் மற்றும் அவரது மனைவி சமீரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் உளவு முகவர்களுடன் இந்த தம்பதிகள் தொடர்பில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கு தளவாட உதவிகளையும் செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதி கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 8 இந்திய சிம் கார்டுகளை துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
The Northern Range of the Delhi Police Special Cell busts an alleged ISI-backed, Pakistan-based espionage network and arrests a Delhi-based couple accused of working for Pakistani Intelligence Operatives (PIOs) through social media since 2024.
— All India Radio News (@airnewsalerts) August 28, 2026
According to Delhi police, the… pic.twitter.com/6qFbGdQ9j8
அத்துடன் இதற்காக அவர்கள் ரூ.30,000 வரை பணம் கை மாற்றியுள்ளனர்.
விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பாகிஸ்தான் உளவு முகவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக சஹால் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |