கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை... இளம் வயதில் ஓய்வூதியம் கோரிய பெண்
ஆஸ்திருயா நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய முடியாத நிலையில், 32 வயது பெண் ஒருவர் ஓய்வூதியம் கேட்டு மனு அளித்துள்ளார்.
ஆஸ்திரியா நாட்டவரான 32 வயது Maarte Preller என்ற பெண்மணிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னர் உரிய சிகிச்சை எடுத்தும் அவரால் பூரணமாக குணமடைய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
தொடர்ந்து சோர்வாக இருப்பதை தாம் உணர்வதாக தெரிவித்துள்ளார், மட்டுமின்றி அடிக்கடி இதய துடிப்பு இரட்டிப்பாக மாறுவதும், மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவைகளால் தாம் அவதியுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக நாள் தோறும் தாம் இதே பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் Maarte Preller தெரிவித்துள்ளார்.
ப்ரெல்லருக்கு தற்போது மனநோய் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கருதுவதால், அவரது உடல்நல காப்பீட்டு நிறுவனம், ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்தை பெறுமாறு பரிந்துரைத்துள்ளது.
ப்ரெல்லரால் நாளுக்கு 3-ல் இருந்து 44 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மிகவும் எளிதான வேலை மட்டுமே அவரால் செய்ய முடிகிறது எனவும் தெரிய வந்துள்ளது.