சிறுநீரக குழாய்க்குள் 6 சிவப்பு காராமணியை நுழைத்த வாலிபர்! வலி பொறுக்க முடியாததால் எடுத்த அதிரடி முடிவு
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது சிறுநீரக குழாய்க்குள் 6 காராமணியை நுழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நகரில் உள்ள மிச்சிகன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பின்னர் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் விளையாட்டு தனமாக தனது சிறுநீர்குழாயில் 6 சிவப்பு காராமணியை நுழைத்துள்ளார். ஆனால் என்ன செய்தாலும் அதை வெளியே எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக பொறுக்கமுடியாத வலியால் துடித்துள்ளார். இதிலிருந்து எப்படியாவது விடுபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவரிடம் சிறுநீர் கழிக்கும் போது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் அவர் செய்த வேலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது சிறுநீர் குழாய்க்குள் 15 மில்லி மீட்டர் அளவிற்கு 6 காராமணி அடைத்தது தெரியவந்தது.
அவற்றில் ஒரு காராமணியை மருத்துவர்கள் எடுத்துவிட்டனர். ஆனால் மற்றதை அவர்களால் எடுக்கமுடியவில்லை என்பதால் மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 5 சிவப்பு காராமணியை எடுத்துள்ளனர். அவர் விளையாட்டாக செய்த காரியம் அவருடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்துள்ளது.