ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது கொல்லப்பட்ட அழகிய இளம்பெண்: இன்று அஞ்சலி நிகழ்ச்சி
ஜேர்மனிக்கு சுற்றுலா சென்றபோது, பாலியல் நோக்கம் கொண்ட ஒருவரால் 160 அடி பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட அழகிய இளம்பெண்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற மாளிகைக்கு சுற்றுலா சென்ற இளம்பெண்கள்
அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். டிஸ்னி திரைப்படங்கள் பலவற்றில் காட்டப்படும் மாளிகைகள் இந்த மாளிகையின் மாதிரியை அடிப்படையாக கொண்டவையாம்.
Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) ஆகிய இருவரும் அந்த மாளிகையைக் காணச் சென்றுள்ளார்கள்.
ஏமாற்றி மோசம் செய்த நபர்
அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தான் அந்த இடத்தைக் காண அந்த பெண்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அவரது நோக்கம் மோசமானதாக இருந்திருக்கிறது. அவர் ஈவாவிடம் தவறாக நடக்க முயன்றிருப்பார் போலும், கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் அந்த நபர். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத அந்த நபர், அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், ஈவாவைக் காப்பாற்ற இயலவில்லை, அவர் உயிரிழந்துவிட்டார்.
சமீபத்திய தகவல்
உயிரிழந்த ஈவா, Naperville என்னுமிடத்தில் வளர்ந்தவர் ஆவார். அவருக்கு இன்று காலை 10.00 மணிக்கு Napervilleயில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெல்சி, கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |