Bank Account -யே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளைஞர்கள்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்
வேலை இல்லாத பல இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மோசடி கும்பலிடம் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர்.
Bank Account வாடகை
வேலை இல்லாத இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மோசடி கும்பலிடம் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதாக கோவா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பொலிஸார் கூறுகையில், "சிறிய வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடி கும்பல் அவர்களை ஏமாற்றுகிறது.
அந்த இளைஞர்களும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக வங்கிக்கணக்குகளை மோசடி கும்பலிடம் வாடகைக்கு விட்டு பணத்தை பெறுகின்றனர்.
அதாவது, ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கிப் பரிவர்த்தனைக்கும் ரூ.1000 -யை கமிஷனாக மோசடி கும்பல் இளைஞர்களுக்கு வழங்குகிறது.
காசோலை புத்தகம் உட்பட வங்கிக் கணக்கின் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் வைத்திருப்பதையும் மோசடி கும்பல் உறுதி செய்கிறது.
சில நேரங்களில் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகையை போட்டுவிட்டு அவர்களையே எடுக்க சொல்கின்றனர். அந்த இளைஞர்களும் பணத்தை எடுத்து அதில் இருந்து கமிஷன் பணத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை மோசடி கும்பலிடம் கொடுக்கின்றனர்.
சியோலிம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய ரூ.45 லட்சத்தை ஒன்லைன் வர்த்தகத்தில் இழந்ததாக புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி விசாரித்தபோது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
அண்மையில், பனாஜியைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை தருவதாக கூறி ரூ.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அதேபோல, நகை வியாபாரியிடம் ரூ.2.5 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களின் பணமானது இந்த மாதிரியான இளைஞர்களின் வங்கிக்கணக்குகளில் போட்டு இணைய மோசடிக் கும்பலுக்கு மாற்றப்பட்டது.
இதனால், இதுபோன்ற சட்டவிரோத மோசடிக்கு துணைபோகும் இளைஞர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |