சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது.., பணியில் சேர்ந்து 6 மாதமே ஆன இளம் ராணுவ வீரர் உயிரிழப்பு
சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது இளம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் ராணுவ வீரர் உயிரிழப்பு
சிக்கிமில் சக ராணுவ வீரர் ஆற்றில் விழுந்ததால் அவரை காப்பாற்ற முயன்ற இளம் ராணுவ வீரர் நீரோட்டத்தில் அடித்துச் சென்றதால் உயிரிழந்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், அயோத்தியைச் சேர்ந்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி (23). இவர் இந்திய ராணுவத்தின் சிக்கிம் ஸ்கவுட்ஸில் சேர்ந்து 6 மாதங்களே ஆகியுள்ளது.
இந்நிலையில், நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுகுழுவில் இருந்த நபர் ஒருவர் மரப்பலகையில் இருந்து ஆற்றில் விழுந்தார்.
பாலத்திலிருந்து விழுந்த அக்னிவீர் ஸ்டீபன் சுப்பாவை காப்பாற்ற சஷாங்க் திவாரி தண்ணீரில் குதித்தார். அதேபோல, மற்றொரு சிப்பாய் நாயக் காட்டேலும் குதித்தார்.
அவர்கள் நீரில் மூழ்கிய அக்னி வீரரை காப்பாற்றினர். ஆனால், ஆற்றில் குதித்த லெப்டினன்ட் சஷாங்க் திவாரி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார். மேலும், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |