ஜாலியாக பாடலுக்கு நடனம் ஆடும் இளம் தாலிபான்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஆப்கானில் இளம் தாலிபான்கள் அந்நாட்டின் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பல கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இருந்தனர்.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை அவை இருக்காது என்று தாலிபான்கள் நம்பிக்கை கொடுத்து இருந்தாலும் மீண்டும் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுக்குள் சென்றதிலிருந்து அந்நாடு குறித்த எண்ணற்ற நினைத்துப் பார்க்க முடியாத செய்திகள் வெளிவருகின்றன.
சமீபத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது என்று தாலிபான்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தாலிபான்கள் ஒன்று சேர்ந்து அந்நாட்டின் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோ அர்கந்தாப் நதிக்கரையில் படமாக்கப்பட்டது. இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.