கடலுக்குள் மூழ்கிய அழகிய குட்டி தீவு!!! அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்
மாயமான ஒரு அழகிய தீவைத் தேடுகிறார் ஒரு இளம்பெண்... அது அவர் வளர்ந்த தீவு. இன்று அதைக் காணவில்லை.
சிறுமி கிரேட்டா தன்பெர்க் முதல், ஏராளமான பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து குரல் கொடுக்கும்போதெல்லாம் அவர்கள் சந்தித்தது அலட்சியமும் அவமதிப்பும்தான்.
பருவநிலை மாற்றத்தை கவனிக்காவிட்டால், கடல் மட்டம் உயரும், அது நிலப்பரப்பை கபளீகரம் செய்துவிடும் என்று அவர்கள் கூறியபோதெல்லாம், அச்சச்சோ அப்படியா என சமூக ஊடகங்களில் கமெண்ட் போட்டதோடு பலர் அமைதியாகிவிட்டார்கள்.
ஆனால், பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பயந்தது உண்மையாகியிருக்கிறது... ஆம், ஒரு தீவே காணாமல் போயிருக்கிறது!
ஏற்கனவே, இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் குமரிக்கண்டம் என்ற ஒரு பகுதி இருந்ததாகவும், அதை கடல் ஆட்கொண்டு விட்டதாகவும் வரலாற்றில் படித்திருக்கிறோம்.
ஆனால், இப்போது கண் முன்னே தான் வளர்ந்த ஒரு தீவு காணாமல் போனதைக் கண்டு கலங்கிப்போய் நிற்கிறார் ஒரு இளம்பெண்.
சாலமோன் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுக்கூட்டங்களில் ஒன்றான Kale தீவுதான் இப்போது கடலால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் Gladys Habu தன் பெற்றோருடன் Kale தீவுக்கு செல்வாராம். அவரும் அவரது சகோதரிகளும் அங்குள்ள கடற்கரையில் விளையாடுவார்களாம்.
அப்போது, அங்கிருந்த காட்டுக்குள் Gladys காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அவரது பெற்றோர் அவரது கையை பிடித்துக்கொண்டு அவருடனேயே நடப்பார்களாம்.
இப்போது மீண்டும் அதே Kale தீவுக்கு வந்திருக்கிறார் Gladys. ஆனால், அந்த தீவு இப்போது அங்கே இல்லை.
அடர்ந்த காடு இருந்த இடத்தில் சில மரங்கள் மட்டும் மிஞ்சியிருக்க, முன்பு மரங்கள் இருந்ததற்கு ஆதாரமாக கடலுக்கடியில் இருந்து சில காய்ந்த மரங்கள் மட்டும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஆம், Kale தீவு காணாமல் போய்விட்டது, கடலால் கபளீகரம் செய்யபட்டுவிட்டது.
மேற்கத்திய நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் குறித்து பேசுகிறார்கள். எங்கள் தீவுகள் அந்த பசுமை இல்ல வாயுக்களை பெருமளவில் வெளியேற்றுவதில்லை. ஆனால், முதலில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாங்கள்தான் என்கிறார் Gladys.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் கண் முன்னே ஒரு தீவை கபளீகரம் செய்துவிட்டன. இனியாவது விழித்துக்கொள்ளுமா உலகம்?