அமெரிக்காவில் இந்திய முறைப்படி ஆடம்பரமாக திருமணம் செய்த இளம்பெண்: செலவு எவ்வளவு தெரியுமா?
இந்திய இளம்பெண் ஒருவர், அமெரிக்காவில், இந்திய முறைப்படி தனது காதலரைத் திருமணம் செய்துகொண்டார். ஆடம்பரமாக நடைபெற்ற அந்த திருமணத்துக்கு ஆன செலவு, 2 மில்லியன் டொலர்கள்.
5 நாட்கள் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம்
ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றிவரும் கார்லிற்றா (Carlita Nair) சஞ்சய் (Sanjay Balgobin) ஜோடி, தங்கள் திருமணத்தை ப்ளோரிடாவில் நடத்துவது என முடிவு செய்திருந்தது.
P.Taufiq Photography
அதன்படி, ஐந்து நாட்கள் ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்ச்சிகளுக்காக 2 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
சுமார் 400 விருந்தினர்கள் பங்கேற்ற அந்த திருமணத்துக்கான அலங்காரத்துக்கு மட்டுமே 700,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
P.Taufiq Photography
சிறப்பாக தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண உடைகள், வாகனங்கள், விருந்தினர்களை குஷிப்படுத்த நடன நிகழ்ச்சிகள் என எங்கும் ஆடம்பரம் எதிலும் ஆடம்பரமாக நடந்தேறியது கார்லிற்றா, சஞ்சய் ஜோடியின் திருமணம்.
P.Taufiq Photography
திருமண நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் கார்லிற்றா. அவற்றைப் பார்த்தாலே, அந்த திருமணம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக நிகழ்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
P.Taufiq Photography
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |