திருமணத்திற்கு சில மாதங்கள்..24 வயது கார் பந்தய வீராங்கனை அதிர்ச்சி மரணம்
அமெரிக்காவில் கார் பந்தய வீராங்கனை ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் கார் பந்தய வீராங்கனை
இண்டியானாவைச் சேர்ந்த இளம் கார் பந்தய வீராங்கனை ஆஷ்லியா ஆல்பர்ட்சன் (24). இவர் NASCAR கோப்பையை மூன்று முறை வென்ற டோனி ஸ்டீவர்ட்டின் அணியில் Dirt race ஓட்டுநராக இருந்தார்.
ஆஷ்லியாவுக்கும், ஜேக்கப் கெல்லி (31) என்பவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
சாலை விபத்து
இந்நிலையில் தனது வருங்கால கணவர் கார் ஓட்ட, அவருடன் ஆஷ்லியா பயணித்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
இருவரும் சென்ற கார் இண்டியானாவின் ஜேக்சன் கவுண்டியில் வலதுபுறம் வந்த மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
இரண்டு கார்களின் ஓட்டுநர்களும் வேகமாக ஓட்டத் தொடங்கி, மற்ற வாகனத்தை கடந்து செல்ல அனுமதி மறுத்துள்ளனர். அப்போது இரு வாகனங்களும் விபத்திற்குள்ளாகின.
இதில் ஆஷ்லியா காரில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Indiana State Police
பரிதாப பலி
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், கடுமையான காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் கெல்லி மற்றும் மற்ற வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என் மகள் நேசித்த அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஒரு வீடியோவை உருவாக்குவதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை என ஆஷ்லியாவின் தந்தை உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
Instagram
அஞ்சலி பதிவு
அதேபோல் டோனி ஸ்டீவர்ட் தனது உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி பதிவில், 'ஒரு teammate-ஐ இன்று நான் இழந்தேன். அவர் ஒரு சிறந்த கார் ரேஸரான இருந்தார். அவர் சாலை விபத்தில் சிக்கி தனது வாழ்க்கையை இழந்தார்.
இதேபோல் கடந்த காலத்தில் நானும் விபத்தில் சிக்கியுள்ளேன். நெடுஞ்சாலையில் கட்டுப்பாடுடன் வாகனத்தை இயக்குவதன் மூலம் ஆஷ்லியாவைக் கௌரவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |