தன் நிலை மறந்து போதை மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு இளைஞனால் நேர்ந்த கொடுமை! வீடியோ காட்சிகளை கண்டுபிடித்த பொலிசார்
அமெரிக்காவில் தன் நிலை மறந்து மயக்கத்தில் இருந்த பெண்ணை சீரழித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லின்கால்னை சேர்ந்தவர் ஜோசிப் பராசா (24). இவர் தான் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார்.
இவர் மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணொருவரை சீரழிக்கும் காட்சிகளை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரும் கொடுத்தார்.
அதில், எனக்கு ஜோசிப் போதை மருந்துகளை கொடுத்தார். இதையடுத்து தன்னிலை மறந்து மயக்கத்திற்கு சென்றேன், பின்னர் என்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறியுள்ளார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஜோசிப்பை பொலிசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.