உக்ரைனில் வயிற்றில் இருந்த குழந்தையை கொஞ்சிய கர்ப்பிணி! குழந்தை பிறந்த பின் நடந்த பயங்கரம்... புகைப்படங்கள்
உக்ரைனில் ஒடேசா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இளம்பெண்ணும் அவரின் 3 மாத குழந்தையும் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமானது. இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
She was a mom. She is no more. And neither is her 3 months old baby girl Kira. They were 2 of the 6 killed by #Russia’s missile in #Odesa. 18 were wounded. #CivilianCasualties pic.twitter.com/7wwZwQpfCr
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 23, 2022
இந்த ஆறு பேரில் இளம்தாய் மற்றும் அவரின் 3 மாத பெண் குழந்தை கீராவும் அடங்குவர். குறித்த இளம்பெண் கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் இருந்த குழந்தையை தொட்டபடி எடுத்த புகைப்படமும், குழந்தை பிறந்த பின்னர் அதனுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இது குறித்த உக்ரேனிய எம்.பி லிசியா சமூகவலைதள பதிவில், இவர்கள் தான் ஒடேசா நகரில் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் ஆவர்.
எங்கிருந்தோ வந்த ஏவுகணை தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளனர்.
That is the mother and her baby that were killed today in #Odesa. Just a random missile and a random hit. Nowhere is really ever safe when you live in a warzone https://t.co/du3Xb3Ty8x pic.twitter.com/6wmhsvt6Jj
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 23, 2022