எறும்புகளை பார்த்து பயப்படும் அரிய நோய் - விபரீத முடிவெடுத்த இளம்பெண்
எறும்புகள் மீதான பயம் காரணமாக இளம்பெண் விபரீத முடிவெடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் மஞ்சேரியல் நகரை சேர்ந்த 25 வயதான மனிஷா என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளது.
எறும்புகள் மீதான பயம்
காலையில் வேலைக்கு சென்ற இவரது கணவர் ஸ்ரீகாந், வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அவரது மனைவி சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

அதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "மன்னிக்கவும். எறும்புகளுடன் வாழ்வது என் தவறு அல்ல. குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அன்னவரம் மற்றும் திருப்பதி ஹண்டிகளில் ரூ. 1,116 நன்கொடை அளியுங்கள். எல்லாம்மாவுக்கு ஒடிபியம் காணிக்கை செலுத்த மறக்காதீர்கள்" என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர், வீட்டை சுத்தம் செய்ய போவதாக கூறி, தனது குழந்தையை உறவினர்களின் பராமரிப்பில் விட்டுள்ளார்.
மனிஷா சிறு வயதில் இருந்தே எறும்புகள் மீதான ஒரு தீவிர பயத்தால் (Myrmecophobia) போராடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் முன்னர் சிகிச்சையும் எடுத்துள்ளார்.
வீட்டை சுத்தம் செய்யும் போது எறும்பை பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. மைர்மெகோபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எறும்புகளைப் பார்த்தாலே கடுமையான பீதியடைவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |