வெறும் 29 வயதில் 11 பில்லியன் டொலர் மதிப்பு நிறுவனத்தை உருவாக்கியவர்... யாரிந்த லுவானா லோப்ஸ் லாரா
பிரேசிலைச் சேர்ந்த லுவானா லோப்ஸ் லாரா, புதிதாக தொடங்கிய தனது நிறுவனத்தின் வெற்றியை அடுத்து, உலகின் சுயமாக உருவான இளம் வயது பெண் கோடீஸ்வரர் பட்டத்தை வென்றார்.
மிகவும் தீவிரமான
பட்டப்படிப்பை முடித்து வெறும் ஆறு வருடங்களில் அவர் இந்த சாதனையை நிகழ்ச்சியுள்ளார். லுவானா லோப்ஸ் லாராவின் Kalshi நிறுவனம் 11 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டியது.
Scale AI நிறுவனத்தின் 31 வயது Lucy Guo என்பவரின் சாதனையை லாரா முறியடித்துள்ளார். 29 வயதான லுவானா லோப்ஸ் லாரா, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.
கல்லூரி காலகட்டத்திலேயே அவர் ரே டாலியோவின் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் மற்றும் கென் கிரிஃபினின் சிட்டாடலிலும் பணியாற்றினார்.
லுவானாவின் உயர்நிலைப் பள்ளி நாட்கள் அவருடைய வாழ்க்கையின் மிகவும் தீவிரமான வருடங்கள் என்றே அவர் கூறுகிறார். காலையிலிருந்து நண்பகல் வரை படிப்பும், அதன் பின்னர் அவர் பாலே வகுப்புகளுக்குச் சென்றார்.
அவர் தனது உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு தொழில்முறை நடனக் கலைஞரானார் மற்றும் ஆஸ்திரியாவில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
உயர்நிலைப் பள்ளி நாட்களில், கல்விப் போட்டிகளுக்குத் தயாராவதற்காக இரவு நேரங்களில் தாமதமாகப் படிப்பார். அந்தப் போட்டிகளை அவர் வென்றார்.
Kalshi நிறுவனம்
பிரேசிலிய வானியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கமும், சாண்டா கேடரினா கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கமும் இதில் அடங்கும்.
MIT-ல் தனக்கு அறிமுகமான Tarek Mansour என்பவருடன் இணைந்து Kalshi நிறுவனத்தை தொடங்கினார். 2018ல் நியூயார்க்கில் நிறுவனம் ஒன்றில் இருவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நாட்களில், ஒருநாள் குடியிருப்புக்கு திரும்பும் வழியில் தோன்றிய யோசனையால் உருவானது இந்த Kalshi.
சந்தையின் நகர்வுகளை முன்கூட்டியே கணிக்கும் இந்த நிறுவனத்திற்கு முதலில் கிரிப்டோ சார்ந்த Paradigm நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதன் பின்னர் Sequoia Capital, Andreessen Horowitz and Y Combinator உள்ளிட்ட பலர் முதலீடு செய்ய முன்வந்தனர்.
இந்த ஆண்டு அக்டோபரில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாக திரட்டிய பிறகு 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயையும், ஜூன் மாதத்தில் 185 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிய பிறகு 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயும் ஈட்டியது.
Kalshi நிறுவனம் வெறும் ஆறு மாதங்களுக்குள் அதன் சந்தை மதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனர்கள் இருவரின் சொத்து மதிப்பும் தலா 1.3 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |