கனடாவில் வீட்டுக்குள் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்! பொலிசார் விசாரணை
கனடாவில் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
வின்னிபெக்கில் தான் இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்துள்ளது.
அங்கிருந்த அக்னீஸ் தெருவில் இருந்து பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து அங்குள்ள வீட்டுக்கு பொலிசார் சென்ற போது இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் சுயநினைவை இழந்த நிலையில் விழுந்து கிடந்தார்.
அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பெயர் ருசல் கிபல்ட் (30) என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடந்து வரும் நிலையில், யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.