மகாராணியாரைக் காண உன் மனைவி வரக்கூடாது: மகனுக்கு உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்
மகாராணியாரை காண மேகன் வரக்கூடாது என ஹரிக்கு மன்னர் உத்தரவு.
உறவினர்கள் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏறவும் ஹரிக்கு அனுமதி மறுப்பு.
மகாராணியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நிலையில், அவரைக் காண மேகனை அழைத்துவரக்கூடாது என இளவரசர் ஹரிக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேகன் தன் வாழ்க்கையில் காலடி எடுத்துவைத்த பிறகு, ஹரி தானும் தன் மனைவியும் செய்யப்போகும் எந்த விடயத்தையும் தன் குடும்பத்தார் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை, எல்லாம் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிடும் அறிக்கை, அல்லது சமூக ஊடகம் வாயிலாக வெளியாகும் செய்திதான்!
Credit: James Whatling
தாங்கள் அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கப்போவதை ஹரி மகாராணியாரிடம் கூட முன்கூட்டியே முறைப்படி தெரிவிக்கவில்லை.
இப்போதும் அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் காண்பதற்காக ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிவித்தனர் ஹரியும் மேகனும்.
ஆனால், ஹரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை அழைத்துவரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு துக்கமான நேரத்தில் பால்மோரலுக்கு மேகனை அழைத்து வருவது சரியோ முறையோ அல்ல என்று ஹரியிடம் மன்னர் கூறியதாக, அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
Credit: Getty - Contributor
மகாராணியாரைக் காண நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே வரவேண்டும், இளவரசர் வில்லியமுடைய மனைவியான கேட் கூட வரவில்லை, ஆகவே, மேகன் வரக்கூடாது என உறுதியாகக் கூறிவிட்டாராம் மன்னர்.
இதற்கிடையில், இளவரசர் வில்லியம், இளவரசர்கள் எட்வர்ட் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் பயணித்த விமானப்படை விமானத்தில் இளவரசர் ஹரிக்கும் இடமளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், தனியார் விமானம் ஒன்றில் புறப்பட்டிருக்கிறார் ஹரி.
மகாராணியாருக்கு மிகவும் பிடித்த செல்லப்பேரன் ஹரி, ஆனால், மகாராணியார் இயற்கை எய்தியதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னரே பால்மோரலை வந்தடைந்துள்ளார் ஹரி!
Credit: Getty