15 வயது சகோதரரை கொன்ற இளைஞர்! ஆடையில்லாத நிலையில் கைது..விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்
அமெரிக்காவில் தனது 15 வயது சகோதரரை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட பின், விசாரணையில் அவரது தந்தையும் ஒரு கொலையாளி என தெரிய வந்தது.
கொடூர தாக்குதல்
கலிபோர்னியா மாகாணம் Ventura County பகுதியில் 15 வயது சிறுவன் Zayde Keohohou கொடூர தாக்குதலுக்கு ஆளானார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது
இதனையடுத்து Zuberi Sharp (24) என்ற இளைஞர் விளையாட்டு மைதானம் ஒன்றில் வைத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தபோது Zuberi ஆடையில்லாமல் இருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட சிறுவன் Zuberiயின் சகோதரர் என்பதை குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த கொடூரமான தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. எனினும் கோடரியால் சிறுவன் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தந்தையும் ஒரு கொலையாளி
ஆனால் Zuberiயின் தந்தை Calvin Sharp, 2007ஆம் ஆண்டில் 6 வயது சிறுவனை இறைச்சி வெட்டும் ஆயுதத்தால் கொலை செய்ததற்காக சிறையில் உள்ளார் என்பது தெரிய வந்தது.
இதற்கிடையில் Calvinயின் மகன் Zuberi என்றும், Zayde Keohohouயின் தந்தை வேறொருவர் என்றும் குடும்பத்தினர் Eyewitness Newsயிடம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட Zuberi Sharp தற்போது பிணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |