இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை! கோயில் அருகே நடந்த பயங்கரம்
புத்தாண்டு துவக்கத்தின் முதல் நாளே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று செங்கல்பட்டிலில் அறங்கேறியுள்ளது.
அஜீத்குமார் என்பவர் வீட்டில் இருந்து சிங்கபெருமாள் கோயில் அனுமந்தபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த வேளையில் மர்ம கும்பல் ஒன்று மடக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அஜீத்குமார் தப்பித்து ஓட முயன்ற போது மர்மகும்பல் விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் அஜீத்குமார் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் பின்னர் சடலத்தை மீட்ட மறைமலைநகர் பொலிசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுவதாவது, மலைமேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூர்யாவின் நெருங்கிய கூட்டாளியான கொள்ளி மேட்டுத்தெருவை சேர்த்து சடையன் என்பவரது மகன் (வயது 24) அஜீத்குமாருக்கும் சூர்யாவின் எதிர் கோஷ்டியான தீனா, ராமு என்கிற ராமச்சந்திரன் லோகேஷ், கறிபரத், இவர்களுக்கும் அஜீத்குமாருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த மாதம் அஜீத்குமார் கறிபரத்தை கொலை செய்ய திட்டமிட்டு தன் நண்பர்களோடு சேர்த்து கறி பரத்தை அஜீத்குமார் தாக்கியிருக்கிறார்.
அதில் உயிர் தப்பித்த கறிபரத் பழிவாங்கும் நோக்கில் அஜீத்தை கொலை செய்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோயில் அருகிலேயே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
