பரிசோதனைக்காக வந்த நபர்.., மருத்துவர் கண்முன்னே மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி
மருத்துவ பரிசோதனை செய்ய வந்த இளைஞர் ஒருவர் மருத்துவரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் உயிரிழப்பு
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு நபர் உடல் சோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் அவருக்கு பரிசோதனை மேற்கொள்கிறார். அவர் பரிசோதித்து கொண்டிருக்கும் போதே திடீரென அவர் சரிந்து விழுகிறார்.
உடனே, மருத்துவர் அந்த நபரை சோதனை செய்கிறார். பின்னர், அந்த நபர் இறந்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து, அந்த நபருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பெரும்பாலான இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுவும், இந்தியாவில் 15 முதல் 30 வயதிற்குட்பட்ட மக்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |