ஒரே மடக்கில் ஒரு பாட்டில் வோட்கவை குடித்த இளைஞர்: விபரீதத்தில் முடிந்த சவால்
நண்பர்களின் சவாலை ஏற்று ஒரே மடக்கில் ஒரு பாட்டில் வோட்காவை குடித்த டேனியல் சான்டுல்லி(19) என்ற இளைஞர் உயிருக்கு போராடி வருவது அவரது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி(19) என்ற இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தில் இணைந்து கல்வி பயின்று வந்துள்ளார்.
அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த போது அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம் ஏளனமான தொனியில் 'ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடுவாயா?' என்று சவால் விட்டுள்ளனர்.
அதனை ஏற்றுக்கொண்ட சான்டுல்லியும்(19) முழு பாட்டில் வோட்க்காவையும் ஒரே மடக்கில் குடித்து சவாலில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஒரே மடக்கில் வோட்கவை குடித்ததால் அவரது உடம்பில் உள்ள இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சான்டுல்லி(19) முளை பாதிக்கப்பட்டதோடு, அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
இதை அடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சான்டுல்லின்(19) உடல் தற்போது ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் வந்த போது டேனியலால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. அவர் சுய நினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வழக்கு குறித்து டேனியலின் குடும்ப வழக்கறிஞர் டேவிட் பியாஞ்சி, தனது 30 ஆண்டு அனுபவத்தில், இப்படியொரு மோசமான சம்பவத்தை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
இந்த அனைத்து நிகழ்வுகளும் நீதிமன்றத்திற்கு வந்ததை தொடர்ந்து தான் வெளியே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.