வீட்டு கதவை உடைத்து உள்ளே அத்துமீறி நுழைந்த 24 வயது இளைஞன்! அங்கு விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள்ளே அத்துமீறி நுழைந்த இளைஞன் அங்கிருந்த 8 வயது சிறுமியை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான் ஜோஸில் உள்ள வீட்டுக்குள் கடந்த வெள்ளிகிழமை நபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே அத்துமீறி நுழைந்துள்ளான். வீட்டுக்குள் 8 வயது சிறுமி தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறுமியை தூக்கி கொண்டு அங்கிருந்த அறைக்குள் சென்றான்.
பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து நடந்ததை சிறுமி அழுது கொண்டே தாத்தவிடம் சொன்ன நிலையில் அவனை ஓடி போய் பிடிக்க தாத்தா முயன்றும் முடியவில்லை.
இது தொடர்பாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுமி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியை பொலிசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெயர் Dupree Kenneth Hornsby (24) என தெரியவந்துள்ளது.
பெயிலில் வெளியில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள Dupree அக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளான்.
இதனிடையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.