மறுநாள் காலையில் சுடவைத்த சிக்கன் கிரேவி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.., மதுரையில் நடந்த சோகம்
சிக்கன் கிரேவி சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை இளைஞர்
தமிழக மாவட்டமான மதுரை, கோசாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தரராஜ். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், வீட்டில் இருந்தபடியே டிரேடிங் பணியை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 26 -ம் திகதி ஆனந்தராஜின் தந்தை மேலபனங்காடியில் உள்ள உணவகத்தில் இருந்து செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார். அதனை அன்று இரவே தனது குழந்தையுடன் ஆனந்தராஜ் சாப்பிட்டுள்ளார்.
பின்னர், கிரேவி இன்னும் மீதம் இருந்ததால் மறுநாள் காலையில் சிக்கன் கிரேவியை சுடவைத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
உடனே, ஆனந்தராஜை மீட்டு பிபி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடல்நலம் சரியாகி வீடு திரும்பியுள்ளார்.
ஆனாலும் அவருக்கு வயிற்றுப்போக்கு சரியாகாததால் 28 -ம் திகதி ஊசி போடப்பட்டது. அவர் அன்று மாலையே மயங்கி விழுந்தததால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனந்தராஜின் உடல்நலக்குறைவுக்கு சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி தான் காரணம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |