CSK தோல்வியை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்ட இளைஞர் மரணம்! விசாரணையில் அம்பலமான உண்மை
சென்னையில் இளைஞர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதை கிண்டல் செய்ததாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிகிச்சைப் பலனின்றி
துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 28ஆம் திகதி, ஜீவரத்தினம் என்ற இளைஞரை சிலர் கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்து ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதை, ஜீவரத்தினம் கிண்டல் செய்ததால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என செய்தி வெளியானது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவரத்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அம்பலமான உண்மை
இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திடீர் திருப்பமாக அப்பு என்பவரின் மனைவியிடம் ஜீவரத்தினம் நெருங்கிப் பழகியதால், நண்பர்களுடன் சேர்ந்து அப்பு அவரை கடுமையாக தாக்கியது தெரிய வந்துள்ளது.
மேலும், ஜீவரத்தினத்துடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தும்போது கிரிக்கெட் போட்டி வாக்குவாதத்தில் ஐந்து பேர் அவரை தாக்கியுள்ளனர் என்றும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |