கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்காக நண்பனை கொலை செய்த இளைஞர்
கிரிக்கெட் வீரரை தவறாக பேசிய நபரை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நண்பனை கொலை செய்த இளைஞர்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திற்கு வந்தாலே ரசிகர்களின் ஆரவாரம் அளவுக்கதிகமாக இருக்கும்.
இதில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் போதும் ஒரு அணியை சேர்ந்த ரசிகர்கள் மற்றொரு அணியை சேர்ந்த ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அதற்கு சமூக வலைதளமே ஒரு எடுத்துக்காட்டு.
அந்த வகையான சம்பவம் ஒன்று கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது. நடைபெற்றுள்ளது. தமிழக மாவட்டமான அரியலூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது நண்பர் விக்னேஷ் உடன் மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கிரிக்கெட் குறித்து பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து விக்னேஷ் தவறாக பேசியுள்ளார்.
இதனால், கோபமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், பொலிஸார் தர்மராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |