காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு..இளைஞருக்கு விழுந்த அடி..பின்னர் நடந்த சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலியை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்ற நினைத்த இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் அவரையே கரம் பிடித்தார்.
இளம் காதல் ஜோடி
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரின் சிக்ககிரும்பியைச் சேர்ந்தவர் சேத்தன் (26). இவர் இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வனிதா (24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளது. இதனால் வனிதா கர்ப்பமானார்.
திருமணத்திற்கு மறுப்பு
இது இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததைத் தொடர்ந்து திருமண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வனிதாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என சேத்தன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெண்ணின் தரப்பில் இருந்து அவருடைய சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் சேத்தன் மறுப்பு தெரிவிக்கவே வனிதா அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
அதன் பிறகு சேத்தன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருவழியாக இருவரின் பெற்றோர் முன்னிலையில் சேத்தன் - வனிதாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |