நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்-லொறி! 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி
இந்திய மாநிலம் கர்நாடகாவில் கார் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியாகினர்.
கோர விபத்து
கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் ஈஸ்வரஹள்ளி அருகே நேற்று மாலை சாலை விபத்து நடந்துள்ளது.
இதில் கார் மற்றும் டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் காரில் பயணித்தவர்கள் லொறிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
இதனைக் கண்டவர் அவர்கள் மீட்க முயன்றனர். பின்னர் தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டது.

பரிதாப பலி
ஆனால் அவர்கள் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து அவர்க்ளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் பலியானவர்கள் அனைவரும் சிகளூரு கிராமத்தைச் சேர்ந்த காண்டிராக்டர்கள் என்று தெரிய வந்துள்ளது.
File Photo
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |