தாயிடம் கேடிஎம் பைக் கேட்டு வாங்கித் தராததால் இளைஞர் எடுத்த முடிவு
தமிழக மாவட்டம், திருப்பூரில் விலை உயர்ந்த பைக் கேட்டு தாய் வாங்கித்தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைக் கேட்ட மகன்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரது கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதில், மகன் சௌந்தர்ராஜன் (19) கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் கடந்த சில நாள்களாக விலை உயர்ந்த கேடிஎம் பைக் வாங்கித்தர வேண்டுமென்று தாய் மற்றும் அக்காவிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
அதே போல, நேற்று காலை பைக் கேட்டு வீட்டில் சண்டை போட்டு சௌந்தர்ராஜன் வெளியில் சென்றுள்ளார்.
இளைஞர் தற்கொலை
இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் உடுமலை சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் பொலிசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.
அப்போது தான் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது தெரியவந்தது. பைக் வாங்கித்தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |