இந்தியாவில் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யூடியூப்
யூடியூப் சமூக வலைத்தளம் Premium சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
Premium Subscription
உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக உள்ள யூடியூப்பிற்கு பயனர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்பட்டது.
இதனை தவிர்க்க Ad Blocker எனும் சேவையை யூடியூப் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பயனர்கள் பார்க்கலாம். இதற்காக தனது Premium சந்தாவில் சேரும்படி யூடியூப் பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் Premium சந்தா கட்டணத்தை யூடியூப் உயர்த்தி அறிவித்துள்ளது பயனர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.
சேவையை தொடங்கிய 5 ஆண்டுகளில்
புதிய அறிவிப்பின்படி, Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189யில் இருந்து ரூ.299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79யில் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட பிரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129யில் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தனிநபருக்கான Prepaid மாதாந்திர கட்டணம் ரூ.139யில் இருந்து ரூ.159 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபருக்கான Prepaid காலாண்டு கட்டணம் (3 மாதம்) ரூ.399யில் இருந்து ரூ.459 ஆகவும், ஆண்டு கட்டணம் ரூ.1290யில் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வானது, யூடியூப் பிரீமியம் சேவையை தொடங்கிய 5 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |