கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர்... தந்தை எடுத்த முடிவு
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவில் சிக்கி உடல் உறைந்து மரணமடைந்த இளைஞர் தொடர்பில் அவரது தந்தை சபதம் செய்துள்ளார்.
உடல் உறைந்து இறந்த நிலையில்
ஸ்வீடனை சேர்ந்த 22 வயதான யூடியூப் சாகச இளைஞர், லாப்லாந்தில் உள்ள மலைப்பகுதி வழியாக தனியாக பயணம் செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
[57BBJC[
கடுமையான பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து இறந்த நிலையில் அவர் காணப்பட்டர். ஆனால் தனது மகன் கடைசியாக பதிவு செய்துள்ள காணொளிப் பதிவுகளை மீட்டெடுக்கும் பொருட்டு, அவர் கடைசியாக பயணப்பட்ட பகுதிக்கு செல்ல இருப்பதாக அவரது தந்தை உறுதி செய்துள்ளார்.
அவசரகால சேவைகளைத் தொடர்பு கொண்ட போதிலும், ஃபின்லாந்தின் கடுமையான பனிப்புயலின் மத்தியில் சிக்கி உடல் உறைந்து மரணமடைய, அக்டோபர் 30ம் திகதி உள்ளூர் அதிகாரிகளால் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.
சாகச வீரரான அவரது கடைசி காணொளி 50,000 பார்வைகளைக் கடந்துள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
கடைசியாக தமது பாட்டிக்கு அவர் அனுப்பியுள்ள குறுந்தகவலில், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கவலை வேண்டாம், என்னால் உயிர் தப்ப முடியும் என்பது உங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் தனியாக இறந்திருப்பார்
இதனிடையே அவரது சடலமானது அவர் உருவக்கியிருந்த கூடாரத்தில் காணப்படவில்லை. கடும் பனிப்பொழிவின் போது அவர் ஏன் கூடாரத்தில் இருந்து வெளியேறினார் என்பது மர்மமாக உள்ளது.
ஆனால், அவரது தாயார் தெரிவிக்கையில், கூடாரம் காற்றில் சிக்கியதை அடுத்து அவர் வெளியேறியிருக்கலாம் என்றார். அவரது சடலம் மீட்கப்படும் போது கால்க:ள் இரண்டும் உறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
மூக்கும் காயம்பட்ட நிலையில் இருதுள்ளது. இதனால் அவர் தடுமாறி விழுந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
கடும் துயரத்திற்கு பின்னர் தமது மகன் தனியாக இறந்திருப்பார் என்றும் அவர் கண்கலங்கியுள்ளார். பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால், அவரது உடல் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கே மரணமடைந்தார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |