கவுன்சிலர் கார் ஏற்றி கொடூர கொலை! நெஞ்சை பதற வைக்கும் திகிலூட்டும் காட்சி
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் ஆளும் YSRCP கட்சியின் கவுன்சிலர் கார் எற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கினாடா மாநகராட்சியின் 9 வது வார்டின் கவுன்சிலராக இருக்கும் YSRCP கட்சி நிர்வாகி ரமேஷ் என்பவரே கார் ஏற்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கக்கினாடா கிராமப் பகுதியான கங்கராஜு நகர் சாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் கொலை பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள Sarpavaram பொலிசார், ரமேஷ் மீது காரை ஏற்றி கொன்ற சின்னாவும் அவரது சகோதரரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, சம்பவத்தின் போது சின்னா அவரது சகோதர், ரமேஷ் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் என மொத்தம் 5 பேர் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
இதன் போது ரமேஷிக்கும் சின்னாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சின்னா மற்றொரு இடத்தில் நடந்துக்கொண்டிருக்கும் தானது உறவினரின் பிறந்தாள் கொண்டாட்டத்திற்கு ரமேஷ்-ஐ அழைத்துள்ளார்.
ஆனால், ரமேஷ் செல்ல மறுத்துள்ளார். பிறகு சின்னா அங்கிருந்து புறப்பட அவருடைய காரில் ஏறியுள்ளார்.
தனது கார் சாவியை தேடிய ரமேஷ், சின்னாவின் காருக்கு முன் சென்று வழியை மறித்தபடி நின்று, தனது கார் சாவியை கண்டுபிடித்து தரும்வரை அங்கிருந்து நகர அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.
ரமேஷ் வழியை மறித்து நின்றுக்கொண்டிருந்த போது சின்னா காரை அவர் மீது ஏற்றி சென்றுள்ளார்.
Never seen this brutal visuals. 47-year-old YSRCP Corporator, Kampara Ramesh, was murdered @APPOLICE100 @APPOLICE100 @JaiTDP pic.twitter.com/PPEbUyyP8z
— Syed Mahammed Rafi (@JournalistRafi) February 12, 2021
பின் ரமேஷ் நண்பர்கள் அவரை நகர்த்த முயன்ற போது, சின்னா தொடர்ந்து ரமேஷ் மீது இரண்டு முறை காரை ஏற்றிவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பி சென்றதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சின்னாவுக்கும் ரமேஷ்-க்கும் முன்பகை இருந்ததாகவும், அதனால் ரமேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.