குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை பெற்ற இந்தியர் - யார் இந்த யூசுப் அலி?
குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை, இந்தியரான யூசுப் அலி பெற்றுள்ளார்.
குவைத் கோல்டன் ரெசிடென்சி பெற்ற யூசுப் அலி
எண்ணெய்த் துறையைத் தாண்டி தனது பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 15 ஆண்டு கால தங்க வதிவிட(Golden Residence) திட்டத்தை குவைத் அரசு அறிமுகப்படுத்தியது.

இந்தியரான யூசுப் அலிக்கு, குவைத்தின் முதல் கோல்டன் ரெசிடென்சியை குவைத்தின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபா வழங்கி கௌரவித்துள்ளார்.
معالي النائب الأول لرئيس مجلس الوزراء ووزير الداخلية يسلم أول إقامة ذهبية لمدة 15 عام لرئيس مجلس إدارة مجموعة «لولو» العالمية يوسف علي موسليام
— وزارة الداخلية (@Moi_kuw) July 14, 2026
• الإقامة الذهبية تمثل خطوة استراتيجية لتطوير منظومة الإقامة وتعزيز البيئة الاستثمارية في دولة الكويت
• استقطاب الاستثمارات النوعية… pic.twitter.com/223WGtIT3D
யார் இந்த யூசுப் அலி?
இந்தியாவின் கேரளாவில் பிறந்த யூசுப் அலி, லூலூ குழுமத்தின் தலைவராக உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களில் தொடங்கப்பட்ட லூலூ சூப்பர் மார்க்கெட், தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் இடங்களில் இயங்கி வருகிறது.
ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மால்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சொந்தமாக ஹொட்டல்களை வைத்துள்ளார்.

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிறிய அளவில் பங்குகளைக் கொண்டிருப்பதுடன், அதன் இயக்குநர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, யூசுப் அலியின் நிகர சொத்துமதிப்பு 5.4 பில்லியன் டொலர் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் 720வது இடத்திலும், இந்திய அளவில் 49 வது இடத்திலும் உள்ளார்.
கோல்டன் ரெசிடென்சி பெற தகுதி
இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறுவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், ‘குவைத் நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தால்’ (KDIPA) உரிமம் பெற்ற முதலீட்டு நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும்.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறைந்தது 5 மில்லியன் குவைத் தினார் மதிப்பிலான முதலீடுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
தகுதிபெறும் முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தினர், அவர்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் ஆகியோரும் இந்த கோல்டன் ரெசிடென்சியை பெறலாம்.
மேலும், முதலீட்டாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 மில்லியன் குவைத் தினார் (KD) மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |