முதல் சதம் விளாசிய கனடா வீரர்: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாள அணி தோல்வி
Yuvraj samra century against nepal: நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கனடா வீரர் யுவ்ராஜ் சம்ரா சதம் விளாசினார்.
யுவ்ராஜ் சம்ரா சதம் விளாச கனடா அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
யுவ்ராஜ் சம்ரா
நேபாளம் மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி அல் அமெரட்டில் நடந்தது.
முதலில் ஆடிய கனடா அணி 256 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் சதத்தை பதிவு செய்த யுவ்ராஜ் சம்ரா (Yuvraj Samra) 105 ஓட்டங்கள் குவித்தார்.
லலித் 4 விக்கெட்டுகளும், சந்தீப் லமிச்சனே 3 விக்கெட்டுகளும், திபேந்திர சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நேபாள அணி 46 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் கனடா அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக அர்ஜுன் குமல் 87 ஓட்டங்கள் எடுத்தார். சுக்ஜிந்தர் சிங் 3 விக்கெட்டுகளும், கலீம் சனா மற்றும் ஷீல் படேல் தலா 2 விக்கெட்டுகளும், ஜஹித் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
