மனைவியுடன் சேர்ந்து க்யூட்டான நடனம்! இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர் வெளியிட்ட அழகிய வீடியோ
மனைவியுடன் நடன அசைவில் அசத்தும் வீடியோவை இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹால், 48 டி20 போட்டிகளை விளையாடி 62 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களை திணறடிப்படில் அவர் கில்லாடி.
சஹாலுக்கும், தனஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது. நடன கலைஞரான தனஸ்ரீ அடிக்கடி தனது நடன வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து கால்களை கொண்டு நடன அசைவுடன் அசத்திய வீடியோவை சஹால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது வைரலாகியுள்ளது.