359 ரன் வித்தியாத்தில் இமாலய வெற்றி! அறிமுக போட்டியிலேயே வரலாறு படைத்த வீரர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 359 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
601 ஓட்டங்கள்
புலவாயோவில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
New Zealand end their tour of Zimbabwe with their biggest ever Test win! 🙌 https://t.co/3sVpRkz5f6 #ZIMvNZ pic.twitter.com/AtQCKlUMmj
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 9, 2025
அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணி 486 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி மற்றும் ஸகாரி பவுல்க்ஸுன் புயல்வேக பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சரிந்தது.
நிக் வெல்க் மட்டும் நின்று ஆட ஏனைய வீரர்கள் சொதப்பினர். 28.1 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நியூசிலாந்து வீரர்
இதன்மூலம் நியூசிலாந்து 359 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. நிக் வெல்க் ஆட்டமிழக்காமல் 47 (71) ஓட்டங்கள் எடுத்தார். ஸகாரி பவுல்க்ஸ் 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஸகாரி பவுல்க்ஸ் (Zakary Foulkes) இந்த டெஸ்டில் மொத்தம் 75 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அறிமுக டெஸ்டில் மிக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் வில் ஓ'ரூர்க் தனது அறிமுக டெஸ்டில் 9/93 என்ற சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
A five-wicket innings haul for Zakary Foulkes, who now has the best Test match figures on debut for New Zealand 🙌 #ZIMvNZ pic.twitter.com/wkNQjJ8i93
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 9, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |