148 ஆண்டுகால வரலாற்றில் புதிய சாதனை! ருத்ர தாண்டவமாடிய ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.
கான்வே 153 ஓட்டங்கள்
ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
An unbeaten 256-run stand 💪#ZIMvNZ SCORECARD: https://t.co/PwomScGbZg pic.twitter.com/cMCntuQy4m
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 8, 2025
முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியது.
வில் யங் (Will Young) 74 ஓட்டங்களில் அவுட் ஆக, ஜேக்கப் டஃபி 36 (55) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
சதம் விளாசிய டெவோன் கான்வே (Devon Conway) 153 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்ரா நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) நிதானமாக ஆடி 150 (245) ஓட்டங்கள் விளாசினார். ஆனால் மறுபுறம் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) ருத்ர தாண்டவமாடினார்.
104 பந்துகளில் சதம் அடித்த ரவீந்திரா, 139 ஓட்டங்களில் 2 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 165 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்
நியூசிலாந்து அணியில் மூன்று வீரர்கள் ஒரே இன்னிங்சில் 150 ஓட்டங்கள் விளாசியது (அயல் மண்ணில்) 95 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
அதேபோல், 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் டாப் 5 வீரர்கள் 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததன் மூலம் நியூசிலாந்து புதிய சாதனை படைத்துள்ளது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் மூவர் 150 ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து பெற்றுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து (1938), இந்தியா (1986) அணிகள் இந்த சாதனையை செய்திருந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |