லண்டன் சாலையில் இளம்பெண்ணிற்கு நடந்த பயங்கரம்: சோகத்தில் முடிந்த சம்பவம்!
பிரித்தானியாவில் அடையாளம் தெரியாத அந்நியரால் தாக்கப்பட்டு இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள கிரான்புரூக் சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த ஜாரா அலீனா(35), மருத்துவ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிழக்கு லண்டனின் இல்ஃபோர்ட்(Ilford) பகுதியில் உள்ள கிரான்புரூக் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45am மணியளவில் ஜாரா அலீனா(35)Zara Aleena என்ற இளம்பெண் சந்தர்ப்பவாத அந்நியரால் தாக்கப்பட்டு உயிருக்கு மிகவும் மோசமான நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஜாரா அலீனா மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், சிறப்பான சிகிச்சைகள் அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட போதிலும் ஞாயிற்றுக் கிழமை காலை ஜாரா அலீனா பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
இதுத் தொடர்பாக மெட் காவல்துறையின் கண்காணிப்பாளர் ஸ்டூவர்ட் பெல் வெளியிட்ட அறிக்கையில், ஜாரா அலீனா(35) சாலையில் சென்று கொண்டு இருந்த போது சந்தர்ப்பவாத அந்நியரால் பலமாக தாக்கப்பட்டுள்ளார், இருப்பினும் ஜாரா அலீனாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான எத்தகைய அடையாளங்களும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரிய 29 வயது மதிக்கதக்க நபரை மெட் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகிறது, கைது செய்யப்பட்ட நபருக்கு உயிரிழந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் வயது துல்லியமாக தெரிந்துள்ளது எனவும் ஸ்டூவர்ட் பெல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: அயர்லாந்தின் அதிரடி வீரருக்கு....பேட்டை பரிசாக வழங்கிய இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா!
அத்துடன் ஜாரா அலீனா உள்ளூர் பகுதியை சேர்ந்தவை என்றும், அவர் வழக்கமாக அந்த சாலையில் தனியாக நடைபயிற்சி செய்பவர் என்றும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.