அவர்களுக்காக... வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு
வடகொரிய வீரர்களை அவர்களின் தலைவரிடம் ஒப்படைக்க தாம் தயாரென்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விரைவில் சிக்குவார்கள்
ரஷ்யாவிடம் சிக்கியுள்ள தங்கள் வீரர்களை விடுவிக்க வடகொரியாவின் கிம் ஜோங் உன் முயற்சிகள் முன்னெடுப்பார் என்றால், பதிலுக்கு வடகொரிய வீரர்களை ஒப்படைக்க தாம் தயார் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக உக்ரைன் படையிடம் உயிருடன் சிக்கியுள்ள வடகொரிய வீரர்களுடன், மேலும் பலர் மிக விரைவில் சிக்குவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்ததாக ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருட கால போரில் முதல் முறையாக வட கொரிய வீரர்கள் நுழைந்ததிலிருந்து, அவர்களை உயிருடன் பிடித்ததாக உக்ரைன் முதல் முறையாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில், வட கொரியாவிலிருந்து சுமார் 11,000 துருப்புக்கள் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக குர்ஸ்க் பகுதியில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் ரஷ்யா மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. ரஷ்ய மற்றும் வட கொரியப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவே ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனில் தங்கவும் தயார்
ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் நமது வீரர்களை விடுவிக்க ஏற்பாடு செய்ய முடிந்தால், கிம் ஜாங் உன்னின் வீரர்களை அவரிடம் ஒப்படைக்க உக்ரைன் தயாராக உள்ளது என ஜெலென்ஸ்கி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
கைதான வடகொரிய வீரர்களில் ஒருவர் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு எதிராக போரிடுவது குறித்து தமக்கு தெரியாது என்றும், பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவே தாம் கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கு சென்றுவிட உத்தரவிடப்பட்டால் அதை ஏற்பதாக தெரிவித்துள்ள அந்த வீரர், ஆனால் வாய்ப்பளித்தால் உக்ரைனில் தங்கவும் தாம் தயார் என விசாரணையின் போது அந்த வீரர் தெரிவித்துள்ளதாக ஜெலென்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |