மேற்கத்திய நாடுகள் பதிலளிக்க வேண்டும்... ரஷ்யா தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி
ஏறக்குறைய தினசரி ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் இலக்காகி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான பதிலை உக்ரைன் எதிர்பார்க்கிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
ட்ரோன் தாக்குதல் விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு நகரமான டினிப்ரோ மீது இரவோடு இரவாக ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் மத்திய நகரமான க்ரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரஷ்ய தாக்குதல்கள் எங்கள் மக்களை மட்டுமல்ல, அனைத்து சர்வதேச முயற்சிகளையும், இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் உள்ள தூதரக முயற்சிகளையும் சீர்குலைப்பதாக உக்ரைனின் பங்காளிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஒரே இரவில் உக்ரைனை நோக்கி 172 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும் அவற்றில் 94 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரேனிய இராணுவம் கூறியது. போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் அனைவர் மீதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்கிறது.
வலுவான எதிர்வினை
ஒவ்வொரு நாள் இரவும் நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது கடினம் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு தீவிர பதிலை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தூதரக உறவுகளை நம்பியிருக்கும் உலகில் உள்ள அனைவரிடமிருந்தும் வலுவான எதிர்வினையை உறுதிசெய்ய கோரிக்கை வைப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் முயற்சியால் இரண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது. கருங்கடல் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது மற்றும் எரிசக்தி மற்றும் மின்சாரம் தொடர்புடைய கட்டுமானங்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது. ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கு இதுவரை ஜனாதிபதி புடினிடம் இருந்து ஒப்புதல் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |