ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனம்! குறைந்தது 30 பேர்..ஜெலென்ஸ்கி ஆவேசம்
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கொந்தளித்துள்ளார்.
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A savage Russian drone strike on the railway station in Shostka, Sumy region. All emergency services are already on the scene and have begun helping people. All information about the injured is being established. So far, we know of at least 30 victims. Preliminary reports… pic.twitter.com/ZZoWfPmpL5
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) October 4, 2025
2022யில் ரஷ்யா படையெடுத்தலில் இருந்து உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளது.
காட்டுமிராண்டித்தனம்
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) "காட்டுமிராண்டித்தனம்" என்று அழைத்துள்ளார்.
அவர் கூறுகையில், "ரஷ்யர்கள் பொதுமக்களைத் தாக்குகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இதுவரை பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உட்பட குறைந்தது 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உருக்குலைந்த உலோகம் மற்றும் உடைந்த ஜன்னல்களுடன் சிதைந்த ரயில் பேட்டி தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |